செய்திகள் மலேசியா
தேசிய பாதுகாப்பில் புதிய அத்தியாயம்: ஆயுதப் படைத் தளபதியாக மாலேக் ரசாக் தலைமைப் பொறுப்பை ஏற்றார்
கோலாலம்பூர்:
நாட்டின் பாதுகாப்புத் துறை பெரும் அறைகூவல்களை எதிர்கொண்டுவரும் இந்த நேரத்தில், ஜெனரல் டத்தோ மாலேக் ரசாக் சுலைமான் 24-ஆவது மலேசிய ஆயுதப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இது மக்களின் நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்தவும், அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பாதுகாப்புச் சூழல் மேலும் சிக்கலடைந்து வரும் நிலையில், உயர் தலைமைத்துவம் செயல்திறன் மட்டுமின்றி, இராணுவ தொழில்முறை மதிப்பீடுகள், கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பையும் வகிக்க வேண்டும் என்று பாதுகாப்பு புலனாய்வு, தகவல் தொடர்பு பிரிவில் உள்ள ஏடிஎம் தலைமையகம் தாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“தற்போது நாட்டின் இராணுவப்படை அமைப்பு மறுசீரமைப்பு, மதிப்பீட்டு கட்டத்தில் உள்ளது. குறிப்பாக நிர்வாக ஒழுங்கு, பொறுப்புணர்வு, தலைமைத்துவ நேர்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
விஸ்மா பெர்தஹானானில் நடைபெற்ற பதவி அணிவிப்பு, நியமன விழாவில், டத்தோ மாலேக் ரசாக் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இந்த நியமனம் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது காலித் நோர்டின் அவர்களால், நான்கு நட்சத்திர ஜெனரல் பதவி அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
முன்னதாக மேற்கு மண்டலத் தளபதியாக பணியாற்றிய மாலேக் ரசாக், யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் ஒப்புதலுடன் 24-ஆவது ஆயுதப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆயுதப்படையில் பணியாற்றிய அவர், திறமை, செயல்திறன், சிறப்புத் தன்மை, வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:50 pm
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:18 pm
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
