நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சின் மடானி பக்தி தைப்பூசம் சேவை மையம் மீண்டும் பத்துமலையில் அமைக்கப்படுகிறது

புத்ராஜெயா:

தைப்பூசப் பெருவிழாவினை முன்னிட்டு மனிதவள அமைச்சு மலேசிய மடானி பக்தி தைப்பூசம் 2026 எனும் உன்னதத் திட்டத்தை முன்னெடுக்கிறது.

மனிதநேயம், சமூக மேம்பாடு, வருங்கால வேலை வாய்ப்புச் சந்தை ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் மலேசியா மடானி கோட்பாட்டிற்கு இணங்க சேவை, நல்லிணக்கம், ஒருமைப்பாடு ஆகிய விழுமியங்களை மக்களிடையே வேரூன்றச் செய்யும் ஒரு பாலமாக இத்திட்டம் அமைகின்றது.

பொதுமக்களுக்கான சேவைகள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள், தொழில் வழிகாட்டுதல்கள் வாயிலாக சமூகத்தை அணுக்கப்படுத்தும் நோக்கில், அமைச்சின் இந்தத் தைப்பூசப் பெருந்தொண்டானது மூன்றாவது ஆண்டாகத் தொடர்கிறது.

இத்திட்டம் 2026 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை நான்கு (4) நாட்கள் சிறப்புற நடைபெறும்.

கோலாலம்பூர், பத்துமலையில் அமையவுள்ள அமைச்சின் சேவை மையங்கள் நாள்தோறும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
வரும் வெள்ளிக்கிழமை  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர், தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடுகளை நேரில் பார்வையிட பத்துமலைக்கு வருகை தரவுள்ளனர்.

இந்த வருகையானது மலேசியா மாடானி  தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நல்லிணக்கம், உள்ளடக்கியத் தன்மை மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் மக்களை அரவணைக்கும் அரசாங்கத்தின் தொடர் ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் பறைசாற்றுவதாக அமையும்.

இவ்விழா நடைபெறும் நாட்களில், வருகை தரும் பொதுமக்கள் மனிதவள அமைச்சின் சிறப்பு சேவைப் பந்தலில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு ஒருங்கிணைந்த சேவைகளை நேரடியாகப் பெற்றுப் பயனடையலாம்.

சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பணியிடப் பாதுகாப்பு, தொழில் வழிகாட்டுதல் போன்ற வாழ்வாதாரத்திற்குத் தேவையான முக்கிய அம்சங்களை உள்ளடக்கி, அமைச்சின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகள் சிறப்புச் சேவைகள் வழங்கப்படும் என மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset