நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கார் கழுவும் துறையினர் அலைக்கழிக்கப்படக் கூடாது; எங்களுக்கு குறைந்தது 2,000 அந்நியத் தொழிலாளர்களாவது வேண்டும்: சுரேஷ் ராவ்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள கார் கழுவும் துறையினர் அலைக்கழிக்கப்படக் கூடாது. எங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.

மலேசிய கார் கழுவும் நிலையங்கள் சங்கத்தின் பேச்சாளர் சுரேஷ் ராவ் இதனை கூறினார்.

நாட்டில் 11,000த்திற்கும் மேற்பட்ட கார் கழுவும் நிலையங்கள் உள்ளன.

இருந்தாலும் எங்கள் சங்கத்தில் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

அனைத்து உறுப்பினர்களும் பல கார் கழுவும் நிலையங்கள் உள்ளன.

இருந்தாலும் இத்துறையினருக்கு பல ஆண்டுகளாக அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பது.

குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நாங்கள் இத்தொழிலாளர்களுக்காக போராடி வருகிறோம்.

பல அமைச்சுகளின் படிகளை பல முறை ஏறி வந்தோம். ஆனால் இதுவரை எங்களின் கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் இல்லை.

இதன் அடிப்படையில் தான் இன்று உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை செலவின அமைச்சுக்கு சென்று மீண்டும் கோரிக்கை மனு வழங்கினோம்.

இந்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் என நாங்கள் நம்புவதாக சுரேஷ் ராவ் கூறினார்.

இதனிடயே கார் கழுவும் துறை எதிர்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வுக் காண மொத்தமாக 2,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலை தர வேண்டும்.

குறிப்பாக புதிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் எங்ககை சந்திக்க வேண்டும்.

எங்களின் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அவர் தீர்வுக் காண வேண்டும் என சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset