நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: சுற்றுச் சூழல் அமைச்சர் ஆர்தர் ஜோஸப் குருப்

பெட்டாலிங் ஜெயா:

கடந்த ஆண்டு டிசம்பர் 31 நிலவரப்படி, நாட்டின் முழுவதும் 33 ஆறுகள் மாசடைந்த நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது 20ஆம் ஆண்டில் பதிவான 25 மாசடைந்த ஆறுகளை விட அதிகமாகும்.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்ததாவது, 171 ஆறுகள் சற்று மாசடைந்த நிலையில் உள்ளன; 468 ஆறுகள், அதாவது மொத்தத்தின் 70 சதவீதம், சுத்தமானவையாகக் கருதப்படுகின்றன.

ஆனால், அந்த 33 மாசடைந்த ஆறுகள் வகுப்பு III முதல் IV வரை மாசுபாடு நிலையை பதிவு செய்துள்ளன என்றும், கடந்த ஆண்டில் வகுப்பு V அளவிலான கடுமையான மாசுபாடு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

2024-ஆம் ஆண்டு டிசம்பரில், முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மது, 2019-இல் 59 ஆக இருந்த மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டில் 25 ஆகக் குறைந்ததாக தெரிவித்திருந்தார்.

அந்த ஆண்டில் சுத்தமான ஆறுகள் 486 ஆக இருந்ததால், ஆற்றுநீரின் தரம் முன்னேற்றமடைந்து காணப்பட்டதை இது பிரதிபலிக்கிறது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset