நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த 3 பேர் இன்று காலை கேஎல்ஐஏ விமான நிலையத்தை வந்தடைந்தனர்

சிப்பாங்:

கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த 3 பேர் இன்று காலை கேஎல்ஐஏ விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் மும்பையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மலேசியாவில் போலிசாரால் அவர்கள் தேடப்பட்டு வருபவர்கள்.

கைதான அவர்கள் இன்று காலை 7 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

கேப்டன் பிரபா கும்பலின் முக்கிய நபர்களான மூவரும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, போலிஸ் அதிகாரிகள் கடுமையான பாதுகாப்பின் கீழ் ஒரு வணிக விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அதிகாலை 1 மணியளவில் (உள்ளூர் நேரம்) புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset