நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயான் லெபாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 9 வாகனங்கள் சாம்பலானது

பயான் லெபாஸ்:

பயான் லெபாஸ் பகுதியில் உள்ள துனாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தன.

அதிகாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் ஐந்து கார்கள், நான்கு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகின.

பினாங்கு தீயணைப்பு மீட்பு துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்ததாவது, காலை 4.59 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து பயான் பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்தை சென்றடைந்தனர்.

தீ விபத்தில் பெரோடுவா பெஸ்ஸா, ஹோண்டா சிஆர்-வி, பெரோடுவா மைவி, டொயோட்டா கொரோலா கிராஸ், ஹோண்டா சிவிக் ஆகிய வாகனங்களும், நான்கு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் இல்லை. எனினும் சம்பந்தப்பட்ட வாகனங்கள் சுமார் 80 சதவீதம் வரை எரிந்து நாசமாகின.

தீ காலை 5.27 மணிக்கு கட்டுப்படுத்தப்பட்டு, 6.08 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணமும் இழப்பின் மதிப்பீடும் தற்போது விசாரணையில் உள்ளது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset