நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலைக்கு வரும் பிரதமரிடம் புதிய கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படாது: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலைக்கு வரும் பிரதமரிடம் புதிய கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படாது.

ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்கும் என தாம் நம்புவதாக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவை பொறுத்த வரையில் பத்துமலை இந்த விழாவிற்கான தாய் கோவிலாக விளங்குகிறது.

இதன் அடிப்படையில் தைப்பூச விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பத்துமலை ஆற்றங்கரையில் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் வேல் நிறுவப்பட்டது.

பக்தர்கள் ஆற்றங்கரையில் இருந்து தான் காவடி, பால் குடம் ஏந்தி வருகின்றனர்.

இதனால் அவர்கள் இந்த வேலை வழிப்பட்டு வரும் நோக்கில் ஆற்றங்கரையில் வேல் நிறுவப்பட்டது.

வெள்ளி இரதம் வரும் ஜனவரி 30ஆம் தேதி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் இரவு புறப்படும்.

மறுநாள் இரதம் பத்துமலையை வந்தடைந்ததும் சேவற்கொடி ஏற்றப்படும்.

இதைத் தொடர்ந்து பத்துமலை தைப்பூச விழா அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் ஜனவரி 30ஆம் தேதி பத்துமலைக்கு வருகிறார்.

அவரை வரவேற்க தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாடு உட்பட பல கோரிக்கைகள் பிரதமரிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படாது.

முந்தைய கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்கும் என தாம் நம்புவதாக டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

பத்துமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல வசதிகளை செய்துள்ளது.

ஆக பத்துமலை தைப்பூச விழாவ குறைகளை கண்டுப்பிடிக்காமல் மக்கள் சமய நெறியுடன் தைப்பூச விழாவை கொண்டாட வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset