நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 வயதில் முதலாம் ஆண்டு கல்வி முறையைத் தொடங்கும் முடிவில் அரசாங்கம் உறுதியாக உள்ளது: பிரதமர் அன்வார்

செமினி:

ஆறு வயதில் முதலாம் ஆண்டு கல்வி முறையைத் தொடங்கும் முடிவில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பல எதிர்ப்புகளைப் பெற்ற போதிலும், 2027 முதல் ஆறு வயது குழந்தைகளுக்கான முதல் ஆண்டு கல்வி முறையைத் தொடங்குவதற்கான அதன் முடிவில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

100க்கும் மேற்பட்ட நாடுகள் இதற்கு முன்பு இந்த முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆக இதில் மலேசியா பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

எனவே, எதிர்காலத்தில் புதிய முறையைப் பின்பற்ற பெற்றோர்கள் ஒத்துழைப்பார்கள்.

இரண்டு அல்லது மூன்று பேர், தாங்கள் தயாராக இல்லை, குழந்தை இன்னும் முதிர்ச்சியடையவில்லை, குழந்தை இன்னும் பால் குடிக்கிறது என்று புலம்பட்டும்.

நாம் ஏன் பின்னோக்கிச் செல்ல வேண்டும்? நாம் முன்னேற வேண்டும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset