நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

9 மணி நேரம் காரில் சிக்கிய சிறுவன் மரணம்: சிரம்பானில் சம்பவம்

சிரம்பான்:

சிரம்பானில் கிட்டத்தட்ட 9 மணி நேரம் காரில் சிக்கிய  சிறுவன் மரணமடைந்தான்.

சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் அசாஹர் அப்துல் ரஹீம் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று மாலை ஜாலான் துங்கு ஹாசனில் காரில் விடப்பட்டதாக நம்பப்படும் இரண்டு வயது சிறுவன் இறந்து கிடந்தான்.

சிறுவனின் மரணம் குறித்து தனது துறைக்கு மாலை சுமார் 6.15 மணியளவில் மெர்ஸ் 999 அழைப்பு வந்தது.

காலை 8 மணியளவில் அருகிலுள்ள வங்கியில் பணிபுரிந்த 35 வயது தாயாரால் காரில் கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் காரில் மயக்க நிலையில் காணப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் தாய், அச்சிறுவனை குழந்தை பராமரிப்பாளரிடம் அனுப்ப மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்டவரின் தாய் வேலை முடித்த பிறகு மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset