செய்திகள் மலேசியா
சீராட் அனைத்துலக மாநாடு தொடர்பான தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: மிம்காய்ன் தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமீத் விளக்கம்
கோலாலம்பூர்:
கடந்த 23,24,25ஆம் தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்ற சீராட் அனைத்துலக வர்த்தகர்கள் மாநாடு குறித்து உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பாராட்டுகள் வந்தவண்ணம் உள்ளன என்று மலேசிய முஸ்லிம் வர்த்தக சபையான மிம்காய்ன் தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமீத் கூறினார்.
குறுகிய காலத்திற்குள் 17 நாடுகளில் இருந்து மிகச்சிறந்த வர்த்தக ஜாம்பவான்களை மலேசியாவில் ஒன்றுகூட செய்தோம். மலேசிய முஸ்லிம் வர்த்தக சபையான மிம்காய்ன், முக்மீன் அமைப்பு இணைந்து இந்த சாதனையை புரிந்தோம். எல்லா புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே.
கடந்த இரண்டு நாட்களாக இந்த மாநாட்டின் ஒரு அமர்வில் பேசப்பட்ட உரை தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.
இந்த மாநாட்டின் உரையில் இந்திய முஸ்லிம் தலைவர்களின் இருப்பு குறித்து எந்தவொரு இழிவான பேச்சும் பேசப்படவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
சீராட் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் வெளிப்படுத்திய பாராட்டு மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனின் பங்களிப்புகளுக்கு மட்டுமே உரியது.
இந்திய முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் அவர் குரல் எழுப்பினார் என்று பொருள்படும்படிதான் டத்தோ வீரா ஷாகுல் தனது உரையில் குறிப்பிட்டார்.
அவரது உரை தவறாக ஒருசிலரால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அது தேவை இல்லாமல் அவதூறாக பரப்பப்பட்டு வருவது எனக்கு வேதனை அளிக்கிறது.
அதேபோல் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம் சரவணன் அவர்கள் பேசும்போது உலகளாவிய அளவில் சரியான தலைமைத்துவம் இல்லை என்று பொருள்படும்படி தான் பேசினார். அவர் உள்நாட்டு அரசியலையோ எந்த ஒரு அரசியல் தலைவரையோ குறிப்பிட்டு பேசவில்லை.
அவரை யாரும் இந்திய முஸ்லிம்களின் தலைவர் என்று யாரும் எங்கும் குறிப்பிடவில்லை. மாநாட்டு கூட்டத்திற்கு வராதவர்கள் யுகமான முறையில் பேசுவது வியப்பை அளிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, உண்மைகள், ஊடக பதிவுகள் டத்தோஸ்ரீ எம். சரவணன் என்ன பேசினார் என்பதை நிரூபிக்கின்றன.
நடைமுறை ரீதியாகவும் தொடர்ச்சியாகவும் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு அவர் நிறைய உதவி புரிந்துள்ளார் அதை யாரும் மறுக்க முடியாது. அவர் ம இ கா வின் தேசியத் துணைத் தலைவராக இருந்தும் எல்லா சமூக மக்களையும் அரவணைத்து பேசி வருவது நாம் அறிந்த ஒன்றே.
இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள், அரசு சாரா இயக்கங்களின் பிரச்சினைகளை அவர் கேட்டறிந்ததோடு அதற்கு தீர்வு காணவும் செய்தார்.
தாப்பாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசியாவின் முன்னாள் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு உதவுவதில், குறிப்பாக வர்த்தகர் நலன், வேலை வாய்ப்புகள், கல்வி, சமூக மேம்பாடு ஆகிய அம்சங்களில் ஒரு முக்கியமான, நிலையான பங்கைக் கொண்டிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த மாநாட்டில் டத்தோஸ்ரீ சரவணன் மட்டுமின்றி வந்திருந்த பெரும்பாலான வர்த்தக நிபுணர்களும் தலைமைத்துவ பண்புகள் குறித்தும் அங்கு நிலவும் வெற்றிடம் குறித்தும் பேசினார்கள். நமது பலம் பலவீனம் என்னவென்று அலசினார்கள் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
டத்தோஸ்ரீ சரவணன் பங்களிப்புகளுக்கு அவர் பாராட்டப்பட வேண்டியவர். இதோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 27, 2026, 8:16 pm
மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: சுற்றுச் சூழல் அமைச்சர் ஆர்தர் ஜோஸப் குருப்
January 27, 2026, 7:58 pm
பயான் லெபாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 9 வாகனங்கள் சாம்பலானது
January 27, 2026, 4:33 pm
பெட்டாலிங் ஜெயாவில் சூராவ் நிலம் ஆலயத்திற்கு வழங்கப்படவில்லை: ஃபஹ்மி
January 27, 2026, 4:32 pm
8.6 சதவீத தொழிலாளர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் 10,000 ரிங்கிட் சம்பாதிக்கிறார்கள்
January 27, 2026, 4:28 pm
முதலாம் வகுப்பில் சேரும் 6 வயது மாணவர்களுக்கு நோயறிதல் சோதனைகள் தேவையில்லை: பிரதமர்
January 27, 2026, 4:25 pm
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துன் மகாதீர் முதன் முறையாக பொதுவெளியில் தோன்றினார்
January 27, 2026, 1:02 pm
இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ்: மலேசிய எல்லைகளில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் தீவிரம்
January 27, 2026, 12:40 pm
