செய்திகள் மலேசியா
SIRAT உலக வர்த்தகர்கள் மாநாடு 2026: தமிழ் பேசும் முஸ்லிம்களின் முதல், மிகப்பெரிய சர்வதேச ஒருங்கிணைப்பு: முனைவர் நிஸாம் ஷா
கோலாலம்பூர்:
SIRAT (மலேசிய இந்திய முஸ்லிம்களின் வேர்களையும் கனவுகளையும் ஒன்றாக வலுப்படுத்துதல்) உலக மாநாடு, 2026 ஜனவரி 23 முதல் 25 வரை, கோலாலம்பூரில் உள்ள பேங்க் ரக்யாட் மாநாட்டு மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து பேராசிரியர் முனைவர் நிஸாம் ஷா அல்லபக்ஷ் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதனை அவரது வார்த்தைகளில் அப்படியே தருகிறோம்.
இந்த மாநாடு MUKMIN, MIMCOIN (Malaysian Indian Muslim Chamber of Commerce and Industry) ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் முஸ்லிம் தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள், மாற்றத்தை உருவாக்குபவர்கள் கலந்து கொண்ட முதல், மிகப்பெரிய சர்வதேச ஒருங்கிணைப்பாக இது அமைந்தது. வணிக கூட்டமைப்பு (Business Networking), அதிகாரமளித்தல் (Empowerment), உலகளாவிய வாய்ப்புகள், நிறுவன கட்டமைப்பு (Institution Building) ஆகியவற்றை மையமாகக் கொண்டு, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் முக்கிய விவாதங்கள் இங்கு நடைபெற்றன.
சமீப காலமாக, ஜனவரி 25 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் SIRAT உலக மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வழங்கிய முக்கிய உரை தொடர்பாக சில சர்ச்சையான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதை நான் கவனித்தேன். அவரின் கருத்துக்கு MUKMIN அமைப்பின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ வீரா ஷாஹுல் ஹமீத் தாவூத் முழு ஆதரவை வழங்கினார்.
நான் நேரில் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு, அந்த உரையை உன்னிப்பாக கேட்டும் பார்த்தும் இருந்தேன். மலேசிய இந்திய முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை அவமதிக்கும் அல்லது மறுக்கும் எந்தவொரு பொதுவான அல்லது குறிப்பிட்ட கருத்தும் அந்த உரையில் இடம்பெறவில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
“ஒரு சமூகம் – வேர்களிலிருந்து எதிர்காலம் வரை, கூட்டு நடவடிக்கையில் ஒன்றிணைந்து” என்ற தலைப்பில் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வழங்கிய உரை, உலகளாவிய தமிழ் முஸ்லிம் சமூகத்திற்குள் ஒற்றுமை, நோக்கம், முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
மேலும், தொழில்புரட்சி 4.0-இலிருந்து தொழில்புரட்சி 5.0-இன் மாற்றத்தைக் குறித்தும் அவர் உரையாற்றினார். அவ்வுரையில் முழுமையாக தொழில்நுட்பத்தை மட்டுமே மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து, மனித மதிப்புகள், நிலைத்தன்மை, மீளத்தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய மாற்றத்தை அவர் வலியுறுத்தினார். தொழில்புரட்சி 4.0 டிஜிட்டல் மயமாக்குத்தலுக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கும் வகையில்,தொழில்புரட்சி 5.0 “மனிதனின் பங்களிப்பை” மீண்டும் டிஜிட்டல் கட்டமைப்பில் இணைக்கிறது. இதற்கு ஜப்பான் தற்போது முன்னுதாரணமாக செயல்பட்டு வருவதை அவர் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய டத்தோ ஸ்ரீ எம். சரவணன், உலகளாவிய தமிழ் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக, உலக அளவிலான தலைமைத்துவம், ஒத்துழைப்பு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் வணிக கூட்டமைப்பு, அதிகாரமளித்தல், உலக வாய்ப்புகள், நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் பயன் அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, “நான் இதை செயல்படுத்த வரவில்லை. உலகளாவிய ரீதியில் ஆலோசனை வழங்க மட்டுமே முடியும். மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களும் பங்கேற்பாளர்களுமே முன்முயற்சி எடுக்க வேண்டும்” என்று அவர் தெளிவாகக் கூறினார்.
இந்த பொறுப்பை MUKMIN அல்லது MIMCOIN ஆகிய அமைப்புகளுக்கு ஒப்படைத்து, அவை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் எங்கும் குறிப்பிடவில்லை.
(மூலம்: https://www.facebook.com/share/v/14TFZau1jYk/)
டத்தோ வீரா ஷாஹுல் ஹமீத் தனது உரையில், மனித வளத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் டத்தோ ஸ்ரீ சரவணன், இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் உதவியதாகக் குறிப்பிட்டார். அந்த உரையிலும், மலேசிய இந்திய முஸ்லிம் தலைவர்களை அவமதிக்கும் அல்லது மறுக்கும் எந்தவொரு கருத்தும் இடம்பெறவில்லை.
எனவே, டத்தோ வீரா ஷாஹுல் ஹமீதின் உரை,டத்தோ ஸ்ரீ சரவணனின் பங்களிப்புகளுக்கான பாராட்டாகவே அமைந்தது;
அவரை மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் ஒரே பிரதிநிதி என அங்கீகரிப்பதாக அல்ல.
இதனுடன், மலேசிய முஸ்லிம் வர்த்தக, தொழில் சபை (MIMCOIN)-யின் தலைவர் டத்தோ பி.வி. அப்துல் ஹமீத் அவர்களும்,
மாநாட்டு உரைகளில் இந்திய முஸ்லிம் தலைவர்களை அவமதிக்கும் எந்தவொரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை திடமாக உறுதிப்படுத்தினார்.
(மூலம்: https://nambikkai.com.my/detail/42467)
எனவே, சம்பந்தப்பட்ட தரப்புகள், எந்தவொரு கருத்தை பரப்புவதற்கு முன், மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடமிருந்து உரையின் முழு காணொலிப் பதிவுகளை (video content) சரிபார்க்குமாறு நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தகுந்த ஆதாரங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுகளும் விவாதங்களும், நம் நாட்டின் இந்திய முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.
உண்மை, துல்லியம், நம்பிக்கையைப் பாதுகாக்க இது அவசியமானதாகும். இவ்வாறு முனைவர் நிஸாம் ஷா கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 28, 2026, 5:31 pm
ரஃபிசி மகன் தாக்குதல் வழக்கு: விசாரணை தகவல்கள் தர உள்துறை அமைச்சகம் மறுப்பு
January 28, 2026, 4:01 pm
6 வயதில் முதலாம் ஆண்டு கல்வி முறையைத் தொடங்கும் முடிவில் அரசாங்கம் உறுதியாக உள்ளது: பிரதமர் அன்வார்
January 28, 2026, 3:48 pm
பத்துமலைக்கு வரும் பிரதமரிடம் புதிய கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படாது: டான்ஸ்ரீ நடராஜா
January 28, 2026, 3:42 pm
9 மணி நேரம் காரில் சிக்கிய சிறுவன் மரணம்: சிரம்பானில் சம்பவம்
January 28, 2026, 9:20 am
கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த 3 பேர் இன்று காலை கேஎல்ஐஏ விமான நிலையத்தை வந்தடைந்தனர்
January 27, 2026, 8:16 pm
மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: சுற்றுச் சூழல் அமைச்சர் ஆர்தர் ஜோஸப் குருப்
January 27, 2026, 7:58 pm
