நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ நடராஜா தூற்றுபவர்களை பொருட்படுத்தாமல் உழைத்ததால்தான் பத்துமலை இன்று உலக புகழை பெற்றுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்

பத்துமலை:

டான்ஸ்ரீ நடராஜா தூற்றுபவர்களை பொருட்படுத்தாமல்  உழைத்ததால் தான் பத்துமலை இன்று உலகப் புகழை பெற்றுள்ளது.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

பத்துமலை இன்று உலகப் புகழை பெற்றிருப்பதற்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாதான் முக்கிய காரணம். தற்போது அவரின் வழியில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சிவக்குமார் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி உழைப்பர்களைத்தான் சமூகம் தொடர்ந்து தூற்றும். இது நம் சமூகத்தில் உள்ள மிகப் பெரிய சீர்கேடாகும்.

இருந்தாலும் அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் டான்ஸ்ரீ நடராஜா இன்னமும் உழைத்து வருகிறார்.

இது தான் டான்ஸ்ரீ நடராஜாவிடம் எனக்கு பிடித்த விஷயமாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

பத்துமலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுவாமி மண்டபமும் வைகாசி விசாக உபயத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட தண்ணீர் பந்தலும் இன்று திறப்பு விழா கண்டது.

அதே வேளையில் அருணகிரிநாதர் அருளிய நயவுரையுடன் கூடிய திருப்புகழ் நூலையும் டான்ஸ்ரீ நடராஜா வெளியிட்டார்.

உண்மையில் டான்ஸ்ரீ நடராஜா ஆலயங்களை மட்டும் கட்டவில்லை. 

இந்த நாட்டில் அதிகமான சமய நூல்களை வெளியிட்டது டான்ஸ்ரீ நடராஜா தான். 

இதை யாரும் மறுக்க முடியாது. இது வரலாறு. இந்த வரலாற்றை முறையாக பதிவு செய்ய வேண்டும்.

இல்லையென்ரால் அடுத்த தலைமுறைக்கு இது தெரியாமலேயே போய்விடும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset