நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஜனவரி 30ஆம் தேதி பத்துமலைக்கு வருகிறார்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் ஜனவரி 30ஆம் தேதி பத்துமலைக்கு சிறப்பு வருகை புரியவுள்ளார்.
 
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இதனை கூறினார்.

நாடு முழுவதும் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தைப்பூச விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

குறிப்பாக பத்துமலையில் இவ்விழா உச்சக்கட்ட கோலாகலத்துடன் நடைபெறும்.

இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு தேவஸ்தானம் சார்பில் கடிதம் எழுதினேன்.

ஆனால் பிரதமர் தைப்பூச தினத்தன்று பத்துமலைக்கு வர வாய்ப்பில்லை.

மாறாக ஜனவரி 30 ஆம் தேதி பிரதமர் பத்துமலைக்கு வருகிறேன் என்று பதிலளித்துள்ளார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பிரதமரை உரிய மரியாதைகளுடன் வரவேற்கும்.

அதேபோன்று இந்திய சமூகமும் ஒன்றாக இணைந்து பிரதமரை வரவேற்க வேண்டும்.
இதுதான் எனது எதிர்பார்ப்பு என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

பத்துமலையில் புதிதாக கட்டப்பட இருக்கும் பிரம்மாண்ட மண்டபத்திற்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட் நிதியாக கிடைத்துள்ளது.

இந்த நிதி விரைவில் தேவஸ்தானத்தை வந்து சேரும்.

மேலும் இந்த நிதியை ஒதுக்கிய மடானி அரசாங்கத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset