செய்திகள் மலேசியா
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்
கோலாலம்பூர்:
சவூதி அரேபியாவில் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
ஜெட்டாவில் உள்ள தூதர் தெங்கு தசாரிஃப் ராஜா அப்துல் காதிர் இதனை தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் மோதல்கள் காரணமாக பல விமான நிறுவனங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாலும், அவற்றின் செயல்பாடுகளில் ஏற்பட்ட இடையூறுகளாலும் சுமார் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெட்டா, மெக்கா, மதீனாவில் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான யாத்ரீகர்களை தனது குழுவினர் தொடர்பு கொள்ள முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ் அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.
மேலும் சவுதி அரேபியாவில், குறிப்பாக மெக்கா, மதீனா, ஜெட்டாவில் நிலைமையும் எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் மிகவும் நன்றாக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
சமூக பணிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் ஆலயங்கள் மாணவர்களுக்கு இலவச டியூசன் வகுப்பு
March 3, 2026, 4:46 pm
