செய்திகள் மலேசியா
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
கோலாலம்பூர்:
கடந்த பிப்ரவரி 28 முதல் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் வான்வழி போக்குவரத்து மூடப்பட்டதால் நிறுத்தப்பட்டிருந்த கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மார்ச் 4 முதல் 8 வரை) தற்காலிகமாக மீண்டும் தொடங்குவுள்ளதாக நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
எனினும், பாதுகாப்பு நிலவரத்தைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதால், தோஹா செல்லும் விமான சேவைகள் மார்ச் 7, சனிக்கிழமை வரை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும்.
லண்டன், பாரிஸ் உள்ளிட்ட பிற அனைத்து விமான சேவைகளும், மாற்றுப் பாதைகள் வழியாக வழக்கமான அட்டவணைப்படி இயங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 8-க்குப் பிந்தைய சேவைகள் நிலவர ஆய்வுக்கு உட்பட்டு தேவையான மாற்றங்களுடன் செயல்படுத்தப்படும்.
இதனிடையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தகவல் வழங்கப்பட்டு தேவையானால் மாற்றுப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பயணிகள், விமான பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் நலனிற்குமே முன்னுரிமை வழங்கப்படுவதாக மலேசியா ஏர்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.
பயணிகள் ‘My Booking’ வழியாக தங்களின் தொடர்பு விபரங்களைப் புதுப்பிக்கவும், மலேசியா ஏர்லைன்ஸ் இணையதளத்தின் 'Live Chat' மூலம் உதவி பெறவும் அல்லது 1 300 88 3000 (மலேசியாவில்), +603 7843 3000 (வெளிநாடுகளில்) என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மலேசியா ஏர்லைன்ஸ் தொடர்ந்து நிலவரங்களைக் கண்காணித்து பாதுகாப்பான, நம்பகமான சேவையை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதியளித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
