செய்திகள் மலேசியா
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
சைபர்ஜெயா:
இணைய மோசடி குற்றங்களை ஒழிப்பதற்காக பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு முதன்மை கவனமளிக்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இதனுடன், தேசிய மோசடி மறுமொழி மையம் (NSRC) மூலம் நடவடிக்கைகளை வலுப்படுத்தி அமலாக்க செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பொதுமக்கள் இணைய மோசடிகளுக்குப் பலியாகாமல் இருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என பிரதமர் விரும்புவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
“பேராசை அல்லது மிகவும் லாபகரமானதாகத் தோன்றும் சலுகைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் மோசடியில் சிக்குகின்றனர். இதைத் தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிக முக்கியம் என்பதை பிரதமர் வலியுறுத்தினார்,” என்று அவர் இன்று இங்கு NSRC செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸிலும் கலந்து கொண்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
