செய்திகள் மலேசியா
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
தெமெர்லோ:
தனிநபர்கள், லாரி நிறுவன உரிமையாளர்களிடமிருந்து RM30,000 லஞ்சம் பெற்றும் கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் போலிஸ் போக்குவரத்து அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உதவுவதற்காக இன்று முதல் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி நூர் ஃபகிஸா அபு பக்கர் இந்தத் தடுப்பு காவல் உத்தரவை இன்று தெமெர்லோ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழங்கியுள்ளார்.
சந்தேக நபர் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் தெமெர்லோவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதுக்குட்பட்ட அந்தச் சந்தேக நபர், லாரி நிறுவனங்களுக்குச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கி தப்பிக்க வைப்பதற்காக இந்த லஞ்சத்தைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
“ஆரம்பக்கட்ட விசாரணையில், 2024 முதல் 2025 வரை அவர் இந்த லஞ்சத்தைக் கேட்டும் பெற்றும் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
“லஞ்சத் தொகை பல லாரி நிறுவன உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்டு, சந்தேக நபரின் தனிப்பட்ட வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது,” என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கிடையில், பஹாங் மாநில SPRM இயக்குநர் முஹம்மத் ஷுகோர் முஹம்மத், சம்பந்தப்பட்ட போலிஸ் அதிகாரியின் கைதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் பிரிவு 17(a)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
