நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்:

மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனை கூறினார்.

14 மாதங்கள் பிரதமராக இருந்தபோது அறிமுகப்படுத்திய மலேசிய குடும்பக் கொள்கைக்கும் மலேசிய குடும்பக் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை.

பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் தலைமையிலானதாகக் கூறப்படும் கட்சிக்கு, அவர் தலைமையிலான மலேசிய குடும்ப அறக்கட்டளையுடன் எந்த தொடர்பும் இல்லை.

கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்க இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கும் பொதுமக்களையும் நன்கொடையாளர்களையும் இந்தப் பெயரைப் பயன்படுத்துவது குழப்பமடையச் செய்யும் என தாம் கவலைப்படுவதாக அவர் விளக்கினார்.

நாங்கள் அதே பெயரைப் பயன்படுத்துவதால் மக்கள் எங்களை மோசடி செய்பவர்கள்  என்று நினைப்பார்கள் என்று நாங்கள் கவலைப்படுகிறோம் என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset