நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அரசு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த மலேசிய ஆடவர் கைது 

சிங்கப்பூர்: 

அரசு அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் மலேசிய ஆடவர் ஒருவர் குற்றம் சாட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  மே 2025 முதல் பணம், விலைமதிப்புள்ள பொருட்களை வசூலிக்கும் மோசடி குழுவுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட மலேசியர்களில் 44 வயதான அந்த ஆடவரும் குற்றச்சாட்டப்படவுள்ளார் என்று போலிஸ் மார்ச் 5 அன்று வெளியிட்ட தகவலில் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 2026 ஆம் ஆண்டில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹார்வி நோர்மன் என்ற நிறுவனத்திலிருந்து SGD$10,000 (RM30,886)க்கு மேல் மதிப்புள்ள மின்சார சாதனங்கள் வாங்கியது தொடர்பில் ஒரு நபர் தொடர்பு கொண்டாதாகப் பாதிக்கப்பட்டவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் வாங்கவில்லை என மறுப்பதைத் தெரிவிக்கும் போது, சந்தேக நபர்  அவர் வங்கி கணக்குகளைச் சரிபார்க்கவும், 'Monetary Authority of Singapore' (MAS) தொடர்பு கொள்ள எண்ணைக் கொடுக்கவும் அறிவுரைத்தார்.

பின்னர் பாதிக்கப்பட்டவரை MAS அதிகாரியாகக் காட்டிக் கொண்ட மற்றொரு நபர் தொடர்பு கொண்டு, அவர் ஒரு குற்றவியல் வழக்கில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவருக்கு நகைகளை விசாரணை நோக்கங்களுக்காக ஒரு 'ரகசிய முகவரிடம்' ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்டவர் SGD$28,000 (RM86,508) மதிப்புள்ள நகைகளை தெலோக் பிளாங்கா ரைஸ் பகுதியில் அந்த மலேசிய நபரிடம் ஒப்படைத்தார். விசாரணையின் போது, போலீஸ் அந்த மோசடியாளரை அடையாளம் கண்டு பிஷன் பகுதியில் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மதிப்புள்ள பொருட்கள் அல்லது பணம் வசூலித்து பிற அறியப்படாத நபருக்கு வழங்குவதற்காக அறியப்படாத சில சர்வதேச மோசடி குழுவின் ஒரு பகுதியால் உத்திராவிடப்பட்டதாகத் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நபர் மற்றவர்களுக்குக்  குற்றச் செயலிலிருந்து நன்மை பெற உதவியதாக குற்றச்சாட்டப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, SGD$500,000 (RM1.54 மில்லியன்) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கபடலாம்.

இதற்கிடையில், மலேசியர்கள் அதிகமாக சிங்கப்பூரில் மோசடி குழுவுக்கு பணம், மதிப்புள்ள பொருட்களை வசூலிக்க உதவி செய்கின்றனர் என்று போலிஸ் குறிப்பிட்டுள்ளது.

மோசடி குழுவில் ஈடுபட்டவர்கள் அல்லது புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் நபர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6–24 முறையும், மோசடியாளர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு 12 முறையும் பிரம்படி விதாக்கப்படலாம். 

இவ்வகையான குற்றங்களில் ஈடுபட்டவர்களின் வங்கி சேவைகள், மொபைல் சந்தாவை நிரந்தரமாக தடுக்கும் விதமாக வரையறுக்கப்படலாம்.

எனவே, பொது மக்கள் பணம் அல்லது மதிப்புள்ள பொருட்களை அறியப்படாத நபருக்கு வழங்குவது,  வசூலிக்க எளிதாக்கும் இடங்களில் பணம் அல்லது பொருட்களை வைப்பது, குறியீடுகள் அல்லது கடவுச்சொற்களைப் பகிர்வது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம் என்று போலிஸ் எச்சரித்துள்ளனர்.

சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகள் மக்களிடம் தொலைபேசி மூலம் பணத்தை மாற்றவோ, வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவோ, அதிகாரப்பூர்வமற்ற கடைகளில் இருந்து செயலிகளை நிறுவவோ அல்லது காவல்துறைக்கு அழைப்புகளை மாற்றவோ கேட்க மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset