செய்திகள் உலகம்
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதல் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்
பெஷாவர்:
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளுக்கிடையிலான மோதல் ஏழாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளது. துப்பாக்கிச் சூடுகளும், குண்டு வெடிப்புகளும் அதிகரித்ததால், அப் பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரம் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழி தாக்குதலுக்குப் பிறகு, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மோதல் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தெற்கு ஆசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு, தங்களது தாக்குதல் தாலிபான் ஆட்சி பகுதிகளில் மறைந்து செயல்படும் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் தாலிபான் இதை மறுத்துள்ளது.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் அரசியல் ஆலோசகர் ராணா சனாவுல்லா கூறுகையில், பெரும்பாலான இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும் தெரிவித்தார். ரமலான் நோன்பு திறக்கும் நேரத்திலும் தாக்குதல்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 1,500 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்த வெளிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்குப் பணிந்த ட்ரம்ப்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
