செய்திகள் உலகம்
இரவு முழுவதும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான்: இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள்
துபாய்:
மத்திய கிழக்கில் 6வது நாளாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி சரமாரி தாக்குதலை ஈரான் நேற்று நடத்தியது.
ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்கியதில் அவர் பலியானார்.
இதனால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக வளைகுடா பகுதியில் அமெரிக்க படைகளின் முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடைய இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே இந்தியாவுக்கு வந்து சென்ற ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அழித்தது.
இதில் 87 பேர் பலியானார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஈரான் ஆறாவது நாளாக மத்திய கிழக்கில் வான்வழித் தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வருகிறது.
நேற்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போராளிக் குழுவை குறிவைத்து லெபனானில் புதிய தாக்குதல்களைத் தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறிய சிறிது நேரத்திலேயே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேமில் வான்வழி சைரன்கள் ஒலித்தன. மக்கள் பதறி அடித்துக் கொண்டு சுரங்கங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து இஸ்ரேலில் உள்ள அத்தியாவசிய வணிகங்களைத் தவிர அனைத்து வளாகங்கள், கல்விக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூடும் படி இஸ்ரேல் உத்தரவிட்டது. மேலும் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஈரான் நடத்திய தாக்குதலில் குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 20 அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் அஜர்பைஜான் விமான தளம், கத்தாரில் உள்ள அமெரிக்க தளம், ஈராக் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதை தொடர்ந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது உக்கிரமாக தாக்குதலை தொடங்கின. இதையடுத்து ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நேற்று நடக்க இருந்த இரங்கல் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவித்தது.
ஈரானின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளில் உள்ள ராணுவ, பொருளாதார உள்கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்கப்போவதாக எச்சரித்துள்ளன.
இதையடுத்து தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் வசிப்பவர்களை தற்காலிக முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் வெளியேற்றி வருவதாக கத்தாரின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரமான துபாயில் நேற்று காலை போர் விமானங்களின் பயணம் அதிகரித்தது. குவைத் கடற்கரையில் ஒரு வணிககப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.
ஜோர்டானின் எல்லையில் உள்ள அல்-ஜாப் மாகாணத்தில் ஒரு டிரோனை தாக்கி அழித்ததாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனானின் வடக்கே உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு லெபனானில் உள்ள கடலோர நெடுஞ்சாலையில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய டிரோன் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பல் ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டது. இதில் 87 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் இலங்கை கடற்பகுதியில் நுழைய அனுமதி கேட்டு இரண்டாவது ஈரான் கப்பல் காத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதை இலங்கை அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸா உறுதிப்படுத்தினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் கூறுகையில்,’நாங்கள் அதை அறிந்திருக்கிறோம். அந்த கப்பலில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பிராந்திய அமைதியைப் பாதுகாக்க இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் தலையிடுகிறோம். இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கையின் விரிவாக்கப்பட்ட பொருளாதார மண்டல பகுியில் காத்திருக்கிறது. அவசர உதவி கோரியுள்ளது’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:43 pm
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதல் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்
March 5, 2026, 11:09 am
அணு ஆயுதம் ஏந்தும் போர் கப்பல் சோதனை: கிம் ஜாங் உன் கண்காணிப்பு
March 4, 2026, 10:37 pm
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது
March 4, 2026, 5:14 pm
ஈரானில் பள்ளி தாக்குதல் குறித்து விசாரணை கோரிக்கை: PBB
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
