செய்திகள் உலகம்
ஸ்பெயின், ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு உதவமாட்டோம் என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது
மாட்ரிட்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்த்தக நடவடிக்கைகளை எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரானைத் தாக்குவதற்காக தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த வாஷிங்டனுக்கு அனுமதிக்க மாட்டோம் என்ற தனது மறுப்பை ஸ்பெயின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) கூட்டாளிகளுக்கிடையேயான பிளவு மேலும் தீவிரமடைந்துள்ளது.
சில மணி நேரங்களில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், "மாட்ரிட் அமெரிக்க இராணுவத்துடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளது,” என்று கூறினார். ஆனால், அந்த ஒத்துழைப்பின் தன்மை குறித்து அவர் விளக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, “எங்கள் தளங்களின் பயன்பாடு, மேற்கு ஆசியப் போர், ஈரான் மீது குண்டுவீச்சு ஆகியவற்றைப் பற்றிய எங்கள் நிலைப்பாடு எந்த வகையிலும் மாறவில்லை” என்று ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசே மானுவேல் ஆல்பாரெஸ் உடனடியாகத் தெரிவித்தார்.
அதையடுத்து, ட்ரம்ப் ஸ்பெயினை “மோசமான கூட்டாளி” என விமர்சித்து, அந்த நாட்டுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக மிரட்டினார்.
"உலகிற்கு தீங்கு விளைவிக்கும், எங்கள் மதிப்புகளுக்கும் நலன்களுக்கும் எதிரான எந்த செயலிலும், பழிவாங்கும் அச்சத்தால் நாங்கள் உடந்தையாக மாற மாட்டோம்,” என்று ஸ்பெயின் நாட்டு பிரதமர், பெட்ரோ சான்செஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் அழுத்தமாகக் கூறினார்.
ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பினராக இருப்பதால், 27 நாடுகளுக்கிடையே பொருட்கள் சுதந்திரமாக பரிமாறப்படுகின்றன. இதனால், ஒரே ஒரு உறுப்பினர் நாட்டின் மீது மட்டும் வர்த்தகத் தடைகள் விதிப்பது கடினமாகிறது.
இதற்கிடையில், மனித உரிமை மீறல்கள், சியோனிஸ்ட்–அமெரிக்க கூட்டணியின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பொறுப்புடன் செயல்பட்டதற்காக, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் X தளத்தில் ஸ்பெயினைப் பாராட்டினார்.
சான்செஸுக்கு ஐரோப்பிய தலைவர்களில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் உட்பட ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பினர் நாடுகளின் நலன்களை முழுமையாக பாதுகாக்கும்,” என்று கோஸ்டா X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:43 pm
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதல் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்
March 5, 2026, 11:09 am
அணு ஆயுதம் ஏந்தும் போர் கப்பல் சோதனை: கிம் ஜாங் உன் கண்காணிப்பு
March 4, 2026, 10:37 pm
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது
March 4, 2026, 5:14 pm
ஈரானில் பள்ளி தாக்குதல் குறித்து விசாரணை கோரிக்கை: PBB
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 4, 2026, 2:19 pm
