செய்திகள் உலகம்
ஈரான் தாக்குதலில் இந்தியா தொடர்பு?: அமெரிக்க கடற்படை குற்றச்சாட்டுக்கு நியூ டெல்லி விளக்கம்
நியூ டெல்லி:
ஈரானுடன் ஏற்பட்ட மோதலின் போது அமெரிக்கக் கடற்படை இந்திய துறைமுகத்தைப் பயன்படுத்தியதாக இணையத்தில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை இந்திய வெளி உறவு அமைச்சகம் மறுத்துள்ளது என்று 'Sputnik', 'RIA Novosti' செய்தி வெளியிட்டுள்ளன.
“அமெரிக்க ஊடகமான 'One America News Network' வெளியிட்டுள்ள அமெரிக்கக் கடற்படை இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு பொய்யானதும் உண்மையற்றதுமாகும்.
“இவ்வாறான ஆதாரமற்ற கருத்துகளை பரப்ப வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என அந்த அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'One America News Network' வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியில், அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் கர்னல், பாதுகாப்பு செயலாளரின் முன்னாள் ஆலோசகரான டக்ளஸ் மெக்ரிகோரை மேற்கோள் காட்டி, ஈரானுடன் ஏற்பட்ட மோதலில் அமெரிக்கக் கடற்படை இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் உள்ள பல இலக்குகளை, குறிப்பாக டெஹ்ரானில் உள்ள இடங்களைத் தாக்கின. இந்தத் தாக்குதலால் பல இடங்கள் சேதமடைந்ததுடன் பல உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் பகுதிகளையும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
ஈரானின் அணு திட்டம் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க வாஷிங்டன், டெஹ்ரான் இடையே ஜெனீவாவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த போதிலும், இந்தத் தாக்குதல் இடம்பெற்றது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 5:14 pm
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் உயிருடன் இருப்பது உறுதியாகும்
March 6, 2026, 12:53 pm
அரசு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த மலேசிய ஆடவர் கைது
March 6, 2026, 12:51 pm
5 முதியவர்களைக் கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்: போலிஸ் விசாரணை தீவிரம்
March 6, 2026, 10:06 am
அமெரிக்க விமானத் தாங்கிக் கப்பலைத் தாக்கியதாக ஈரான் குற்றச்சாட்டு
March 6, 2026, 6:58 am
இரவு முழுவதும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான்: இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள்
March 5, 2026, 5:43 pm
