செய்திகள் உலகம்
அணு ஆயுதம் ஏந்தும் போர் கப்பல் சோதனை: கிம் ஜாங் உன் கண்காணிப்பு
சியோல்:
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வடகொரியா தனது கடற்படை வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் இந்த வாரம் 5,000 டன் எடையுடைய ‘சோய் ஹ்யோன்’ வகை போர் கப்பலின் செயல்திறன் சோதனையை நேரில் கண்காணித்ததாக அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடலிலிருந்து நிலப்பரப்பை குறிவைக்கும் ஏவுகணைகள் உட்பட பல சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வடகொரிய கடற்படையை அணு ஆயுதங்களால் மேம்படுத்தும் பணிகள் திருப்திகரமாக முன்னேறி வருவதாக கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் எட்டாத கடல் பாதுகாப்பு மாற்றமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சோதனை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது. அதில் இராணுவத்தை வலுப்படுத்தும் இலக்குகளை அவர் மறுபடியும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிகழ்வு, அணு ஆயுதம் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுத் திட்டங்கள், ஏவுகணை அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள சூழலில் நடைபெற்றுள்ளது.
மேலும், இதே வகையைச் சேர்ந்த மூன்றாவது போர் கப்பல் கட்டுமானத்தில் உள்ளதாகவும், அதை கிம் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வாளர்கள், இந்தக் கப்பலில் அணுத் தலைகளை ஏந்தக்கூடிய குறுகிய தூர தந்திர ஏவுகணைகள் இருக்கக்கூடும் என மதிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவும் வடகொரியாவும் நீண்டகால விரோத நாடுகளாக இருந்தாலும், சமீப மாதங்களில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிம் ஜாங் உன் இடையிலான மாநாடு இந்த ஆண்டில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம், அமெரிக்கா தனது அணு சக்தி நிலையை அங்கீகரித்தால் இரு நாடுகளும் சமரசமாக இணைந்து வாழ முடியும் என கிம் தெரிவித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 3:40 pm
தென் கொரியாவில் கொடூரம்: 8 மாதக் குழந்தையை ரிமோட்டால் அடித்துக் கொன்ற தாய்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
