நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க விமானத் தாங்கிக் கப்பலைத் தாக்கியதாக ஈரான் குற்றச்சாட்டு

டெஹ்ரான்: 

ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட தகவலின்படி, இஸ்லாமிய புரட்சிக் காவல்படை இயக்கிய ட்ரோன் ஒன்று அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன் விமானத் தாங்கிக் கப்பலை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்பும் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியதாக புரட்சிக் காவல்படை தெரிவித்திருந்தது. ஆனால் அந்த குற்றச்சாட்டை அமெரிக்க பாதுகாப்புத் துறை மறுத்து, ஏவப்பட்ட ஏவுகணை அந்தக் கப்பலுக்கு அருகிலும் செல்லவில்லை என்று தெரிவித்தது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான பதற்றம் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன் விமானத் தாங்கிக் கப்பல் மற்றும் சில போர்க்கப்பல்கள் கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கு ஆசியாவுக்கு வந்திருந்தன. 

அதனைத் தொடர்ந்து, யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். ஃபோர்டு என்ற இரண்டாவது விமானத் தாங்கிக் கப்பலும் அதன் பாதுகாப்புக் கப்பல்களுடன் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கரீபியன் பகுதியில் இருந்து மேற்கு ஆசியாவை நோக்கி நகர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset