நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கடந்தாண்டு 2.62 பில்லியன் ரிங்கிட்டை எச்ஆர்டி கோர்ப் அங்கீகரித்துள்ளது

கோலாலம்பூர்:

பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கடந்தாண்டு 2.62 பில்லியன் ரிங்கிட்டை எச்ஆர்டி கோர்ப் அங்கீகரித்துள்ளது.

இது 2024 உடன் ஒப்பிடும்போது 32% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எச்ஆர்சி கோர்ப்பால் நிர்வகிக்கப்படும் திட்டங்கள், திட்டங்களுக்கான பயிற்சி இடங்கள் 2025 இல் 2.8 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தன.

மேலும் 2024 உடன் ஒப்பிடும்போது 3% நேர்மறையான வளர்ச்சியையும் காட்டுகிறது.

2025 ஆம் ஆண்டில் 795,000க்கும் மேற்பட்ட பயிற்சி இடங்களைப் பதிவு செய்த துறை உற்பத்தித் துறையாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பைப் பொறுத்தவரை உற்பத்தித் துறை இரண்டாவது பெரிய துறையாகும்.

மேலும் இது பொதுவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 முதல் 25% வரை பங்களிக்கிறது என்று  எச்ஆர்டி கோர்ப்  ஒரு அறிக்கையில் தெரிவித்து.

கடந்த 2025  நிலவரப்படி, இந்தத் துறையில் மொத்தம் 2.4 மில்லியன் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மின்சாரம், மின்னணு பொருட்கள், உணவு, பான பொருட்கள் மற்றும் பெட்ரோலியம், ரசாயன பொருட்கள் பிரிவுகளும் அடங்கும்.

மேலும் உற்பத்தித் துறையில் வழங்கப்படும் சராசரி ஊதியங்கள் ஆண்டுக்கு ஆண்டு 1.1% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

மலேசியாவின் இலக்கவியல் பொருளாதாரத்தை இயக்கும் தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறை 2024 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.4% பங்களித்தது. மேலும் 2025ஆம் ஆண்டில் 25% ஆக அதிகரித்துள்ளது.

ஐஆர் 4.0 இன் கீழ் எச்ஆர்டி கோர்ப் அங்கீகரிக்கப்பட்ட மொத்த நிதி உதவி 130 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது

முழு இலக்கவியல் பொருளாதாரம், ஐசிடி  துறையையும் உள்ளடக்கிய 103,000 க்கும் மேற்பட்ட பயிற்சி இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர் மீள்தன்மை, வணிக போட்டித்தன்மையின் மையமாக திறன் மேம்பாடு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.

தொழிலாளர் மீள்தன்மை, வணிக போட்டித்தன்மையின் மையமாக திறன் மேம்பாடு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset