நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ மாநாட்டில் கைரி ஜமாலுத்தீன்

கோலாலம்பூர்:

அம்னோ பொது பேராளர் மாநாட்டில் அம்னோ முன்னாள் இளைஞர் அணி தலைவர் கைரி ஜமாலுத்தீன் கலந்து கொண்டார்.

கைரி கடந்த  2023ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர், கைரி ஜமாலுத்தீன் இன்று அம்னோ பொதுப்  பேரவையில்  முதன் முறையாக தோன்றினார்.

பாஜு மெலாயு உடையணிந்த அவர், அம்னோ இளைஞர் இயக்க பொதுச் சபையில் இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மது அக்மல் சலேவின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.

கைரியின் வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பேரணியில் கைரியின் வருகை, 2009 முதல் 2018 வரை அம்னோ இளைஞர் தலைவராக இருந்த நினைவுகளை நினைவூட்டுவதாகத் தோன்றியது.

அவர்களின் வருகையை டிரம்ஸ் வாசித்தல் மற்றும் ஒரு குறுகிய சிலாத் நிகழ்ச்சி உட்பட ஒரு சுருக்கமான விழாவுடன் வரவேற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset