செய்திகள் மலேசியா
தொழிலாளர் சீர்திருத்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும்; தொழிலாளர்களைப் பாதுகாப்பதுடன் திறன்களை மேம்படுத்துவதை மனிதவள அமைச்சு இலக்காக கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
தொழிலாளர் சீர்திருத்த திட்டங்களை முன்னெடுப்பதுடன் தொழிலாளர்களைப் பாதுகாத்து அவர்களின் திறன்களை மேம்படுத்துவதை மனிதவள அமைச்சு இலக்காக கொண்டுள்ளது.
2026 புத்தாண்டு உரையில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
தொழிலாளர் நலனை வலுப்படுத்துதல், திறன் மேம்பாட்டை அதிகரித்தல், நாட்டின் தொழிலாளர் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தனது உறுதிப்பாட்டை மனிதவள அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தேசிய மனிதவளக் கொள்கை 2026–2030 ஐ செயல்படுத்துவதில் அமைச்சு கவனம் செலுத்தும்.
26 தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும்.
மேலும் தொழிலாளர் நீதிமன்றம், சொக்சோ அமைப்பு உள்ளிட்ட முக்கிய சேவைகளை இலக்கவியல் மயமாக்குவதை துரிதப்படுத்தி மக்களுக்கு விரைவான, மிகவும் வெளிப்படையான பயனுள்ள சேவையை உறுதி செய்யும்.
தொழிலாளர் பாதுகாப்பைப் பொறுத்தவரை மனிதவள அமைச்சு குறைந்தபட்ச ஊதிய உத்தரவை மறுஆய்வு செய்யும்.
24 மணி நேர பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்தும்.
தேசிய தொழில்துறை நல்லிணக்கக் குறியீடு மூலம் நிறுவன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும்.
மேலும் தொழிற்சங்கங்கள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரத்தின் பங்கை வலுப்படுத்தும்.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 35 சதவீத திறமையான பணியாளர்களை இலக்காகக் கொண்டு திவேட்டை மேம்படுத்தும்.
e-hailing, p-hailing கிக் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் திறன் மேம்பாட்டு நிதியக ஒதுக்கீடு உட்பட இலக்கு பயிற்சியை விரிவுபடுத்தப்படும்.
அத்துடன தேலண்ட் கோர்ப் மானியம், உயர் வளர்ச்சி உயர் மதிப்பு பொருளாதாரத் துறையின் மேம்பாடு முயற்சிகள் மூலம் தேசிய திறமை சங்கிலியை வலுப்படுத்தும்.
2025 ஆம் ஆண்டு முழுவதும் அடைந்த சிறந்த சாதனைகளுக்காக அனைத்து அமைச்சின் ஊழியர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
இதில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைந்த 1,700 ரிங்கிச் குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக செயல்படுத்துதல், 2025 ஆம் ஆண்டு கிக் தொழிலாளர்கள் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் 1.2 மில்லியன் கிக் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை விரிவுபடுத்துதல், தற்போது 9.6 மில்லியன் பங்களிப்பாளர்களைப் பாதுகாக்கும் சொக்சோ 24-மணிநேர பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகியவை அதில் அடங்கும்.
நாட்டின் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.
மேலும் தொழிலாளர் சந்தையின் நிலைத் தன்மை, இலக்கான கொள்கைகளை செயல்படுத்துவதன் விளைவாக 100,000 க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது அவர் கூறினார்.
கடந்தாண்டுகளை போலவே இந்த 2026ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களை மனிதவள அமைச்சு கொண்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும் நாட்டில் உள்ள 17 மில்லியன் தொழிலாளர்களின் நலனை அடிப்படையாக கொண்டே மனிதவள அமைச்சு அனைத்து முடிவுகளையும் எடுக்கும்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 15, 2026, 1:03 pm
பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் அம்னோவிற்கு வரவேற்க ஜாஹித் தயாராக உள்ளார்: புவாட்
January 15, 2026, 11:25 am
அம்னோ மாநாட்டில் கைரி ஜமாலுத்தீன்
January 14, 2026, 7:11 pm
தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
