நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன்  ஆலயத்தை  7 நாட்களுக்குள் இடம் மாற்றம் செய்ய நோட்டீஸ்

கோலாலம்பூர்:

தலைநகர் தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன்  ஆலயத்தை  7 நாட்களுக்குள் இடம் மாற்றம் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஜாலான் முன்சி அப்துல்லாவில் உள்ள ஜவுளி நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்திலிருந்து புதியதாக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்திற்கு மாற்ற  ஜேக்கல் நிறுவனம் அவகாசம் அளித்துள்ளது.

ஜனவரி 13 தேதியிட்ட நோட்டீஸ் அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்குவதற்காக அந்த இடத்தை காலி செய்ய கோயிலின் உடனடி ஒத்துழைப்பை நிறுவனம் நாடுகிறது.

ஜேக்கல் தலைமை மேலாளர் கதீஜா முகமது யாதிப் கையொப்பமிட்ட கடிதத்தில், நிறுவனம் 1 மில்லியன் ரிங்கிட் தொகை ஒதுக்கியுள்ளதாகவும் ஆலயம் அந்த இடத்தை முழுவதுமாக காலி செய்துவிட்டதை உறுதிசெய்த பிறகு எந்த நேரத்திலும் ஜேக்கலின் வழக்கறிஞரால் இந்த தொகையை வழங்க முடியும் என்றும் கூறியது.

அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறினால், நிறுவனம் இந்த நல்ல நம்பிக்கை சலுகையைதிரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

நில உரிமையாளராக அதன் உரிமைகளைச் செயல்படுத்த தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாக அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

ஆலய செயலாளர் கார்த்திக் குணசீலன் கூறுகையில், தாம் இன்னும் அந்தக் கடிதத்தைப் பார்க்கவில்லை என்றும், சட்ட ஆலோசனையைப் பெறுவதாகவும் கூறினார்.

நாங்கள் அந்தக் கடிதத்தையும் அதன் உள்ளடக்கங்களையும் பார்த்தோம். 

ஆம், நேற்று ஜேக்கலிடமிருந்து கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. ஏழு நாட்களுக்குள் நாங்கள் இடம்பெயர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். 

புதிய நிலத்திற்கு இன்னும் காலி இடம் கிடைக்காததால் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset