நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை மின்படிக்கட்டு விவகாரம்; சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்துக: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

பத்துமலை மின் படிக்கட்டு திட்டத்திற்கான அனுமதி தொடர்பில் ஆலய நிர்வாகமும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடும் ஒருவருக்கொருவரு தவறுகளை சுட்டிக் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

மேலும் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி தைப்பூசத்தை சிறப்பாக கொண்டாட  வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்ததினார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மற்றவர்களின் தவறுகளை தான் கூறி வருகின்றனர். இதனால் ஒரு நல்லதும் நடக்கப் போவதில்லை.

மாநில அரசாங்கத்தின் கீழ் பாப்பா ராயுடு முடிவை அறிவிக்கும் பட்சத்தில் டான்ஸ்ரீ நடராஜா ஆலயம் ஏஜியின் கீழ்தான் செயல்படுவதை உறுதியாக கூறி வருகிறார்.

ஒட்டுமொத்தத்தில் நமக்கு பத்துமலையில் மின் படிக்கட்டு திட்டம் வேண்டும். அதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். 

ஆகையால் மாநில அரசியின் தேவைகளை பூர்த்தி செய்து நாம் மின் படிக்கட்டை கட்டுவதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.

மஇகா தலைமையகத்தின் அருகிலுள்ள ஆலயத்தில் நடந்த பொங்கல் விழாவில் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

ஆலய நிர்வாகம் மாநில மந்திரி புசாருடனும் ஆட்சிக்குழு உறுப்பினருடன் நல்ல உறவை வைத்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடக்கப்பட்டுள்ளது.

ஆகையால் நீதிமன்ற முடிவையும் இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மஇகா தேசிய மகளிர் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த இந்த பொங்கல் விழாவில் மஇகாவினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset