நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் ராணுவத் தலைவருக்குச் சொந்தமான 11.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது: அஸாம் பாக்கி

கோலாலம்பூர்:

முன்னாள் ராணுவத் தலைவருக்குச் சொந்தமான  11.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

கோலாலம்பூரில் அமைந்துள்ள ஒரு ரகசிய வீட்டில் முன்னாள் ராணுவத் தலைவரின் இரண்டு வீடுகளில் இருந்து மொத்தம் 11.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் திரெங்கானுவின் பெசுட்டில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னாள் பிடிடி சம்பந்தப்பட்ட வழக்கில், மொத்தம் 32.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 75 நிறுவனக் கணக்குகளையும் எம்ஏசிசி முடக்கியது.

மேலும் எம்ஏசிசி மொத்தம் 4.4 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம், 360,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒரு ரேஞ்ச் ரோவர் எஸ்விஆர் கார், 2.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 26 கைக்கடிகாரங்களையும் பறிமுதல் செய்தது.

அதே வேளையில் 294,039.90 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள், இரண்டு வைர மோதிரங்கள் (20,000 ரிங்கிட்), 3.7 கிலோகிராம் (2.5 மில்லியன் ரிங்கிட்) எடையுள்ள ஒரு தங்கக் கட்டி, 150 கிராம் தங்கப் பதக்கம் (102,000 ரிங்கிட்), 8.5 கிராம் (5,780 ரிங்கிட்) எடையுள்ள இரண்டு தங்க தினார்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset