நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாக்டர் அக்மாலின் விலகல் ஒற்றுமை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை நிறுத்த அம்னோவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை: ஜாஹித்

கோலாலம்பூர்:

டாக்டர் அக்மாலின் விலகல் ஒற்றுமை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை நிறுத்த அம்னோவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

மலாக்கா அரசாங்க ஆட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக டத்தோ டாக்டர் முஹம்மது அக்மல் சாலே அறிவித்துள்ளார்.,

அவரின் இந்த முடிவு ஒற்றுமை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை நிறுத்த அம்னோவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

மேலும் இந்த நடவடிக்கை, மாறாக, டாக்டர் முஹம்மது அக்மலின் தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

அமனோ இளைஞர் தலைவரின் முடிவை மதிக்கிறேன்.

மேலும் மெர்லிமாவ் மாநில சட்டமன்ற உறுப்பினர் மீது அவ்வாறு செய்ய எந்த அழுத்தமும் இல்லை.

இதன் மூலம் அவருக்கு அடிமட்ட மக்களைச் சென்றடைய போதுமான நேரமும் இடமும் இருக்கலாம்.

நாடு முழுவதும் அம்னோ இளைஞர் இயந்திரத்தைத் திரட்ட இது அவருக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset