நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் அம்னோவிற்கு வரவேற்க ஜாஹித் தயாராக உள்ளார்: புவாட்

கோலாலம்பூர்:

பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் அம்னோவிற்கு வரவேற்க அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் தயாராக உள்ளார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ புவாட் ஷர்காஸி இதனை கூறினார்.

பெர்சத்துவுக்குத் தாவிய முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சிக்குத் திரும்புவதை ஜாஹித் ஹமிடி வரவேற்கிறார்.

இதற்கான கதவு அவ்வளவு அகலமாகத் திறக்கப்படவில்லை அல்லது இறுக்கமாக மூடப்படவில்லை என்று ஜாஹித் நேற்று கூறியது சில தரப்பினரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

எனது புரிதலின் அடிப்படையில், இந்த அறிக்கை உண்மையில் அம்னோவிலிருந்து வந்தது.

ஆனால் 2018 இல் 1ஆ4வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சி மாறிய பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி இது சொல்லப்பட்டது.

அவர்கள் மீண்டும் அம்னோவின் பக்கம் வரவேற்கப்படுகிறார்கள். 

ஆனால், ஒன்றாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset