நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, தமிழகம் இடையிலான திவேட் கல்வித் திட்டம் குறித்து தமிழக துணை முதல்வருடன் பேசப்பட்டது: அர்விந்த்

சென்னை:

மலேசியா, தமிழகம் இடையிலான திவேட் கல்வித் திட்டம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதியுடன் பேசப்பட்டது.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட்டின் இந்தியர் நலன்சார் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

உலகமெங்கும் இருக்கும் நமது மக்கள்  இன்று பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த பொங்கல் பல நாட்களுக்கு மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நமது பாரம்பரியம், கலாசாரத்தை கட்டிக் காக்கும் வகையில் இந்த பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியது இந்நாளை மேலும் சிறப்பாக்கியது.

இச்சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக மலேசியா, தமிழகம் இடையிலான உறவை மேலும் வலுப்பப்டுத்துவது,

இளைஞர்களுக்கான திவேட் கல்வித் திட்டத்தில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது.

இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset