நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா ஆட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக டாக்டர் அக்மால் சாலே அறிவித்தார்

கோலாலம்பூர்:

மலாக்கா ஆட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக டாக்டர் அக்மால் சாலே அறிவித்தார்.

அம்னோ இளைஞர் தலைவருமான அவர் அடுத்த வாரம் மலாக்கா கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அம்னோ இனி ஜசெகவுடன் இணைந்திருக்கக் கூடாது என்று கோரி அடிமட்டக் குரல்கள் எழுந்ததால், கட்சியின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.

பொறுப்பு, கொள்கைகள், கண்ணியம் தான் இதற்கு காரணம் என்றார் அவர்.

அன்று, ஜசெகவுடன் (ஒற்றுமை அரசாங்கத்தில்) அமர முடியாத கீழ்நிலை மக்களின் கவலைகளை நான் கொண்டு வந்தேன்.

எங்கள் மக்கள் ஜசெக மீது கோபமாக இருந்தனர்.

மேலும் பதவிக்காலம் முடியும் வரை அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் உயர் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒரு கீழ்நிலைத் தலைவராக, நான் அடிமட்ட மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள மெர்டேகா மண்டபத்தில் அம்னோ இளைஞர் 2025 பொதுச் சபையில் தனது முக்கிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset