செய்திகள் உலகம்
வளைகுடா நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை இந்திய அரசு மீட்குமா?: ஏக்கத்தில் இந்திய குடிமக்கள்
துபாய்:
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் வளைகுடா நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து அமெரிக்க இராணுவத் தளங்களை அமைக்க உதவி வரும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனியாளாக நின்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில்90 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் வேலை, படிப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சென்றுள்ளனர்.
ஆனால் போர் இப்போது ஈரானோடு நிற்காமல் துபாய், அபுதாபி, பஹ்ரைன், தோஹா, ஜோர்டான் போன்ற நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதனால் அந்த நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் தங்களை பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.
`வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் பிழைப்புக்காக நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் இப்போது குண்டுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம். மோடியும், இந்திய அரசும் எங்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''என்று பலரும் சமூக ஊடகங்களில் கேட்டுக்கொண்டுள்ளார்கள் .
பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் எந்நேரமும் தெருக்களில் சைரன்கள் ஒலிப்பதால் வெளிநாட்டினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
