செய்திகள் உலகம்
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
தெஹ்ரான்:
அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானில் 780-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செம்மஞ்சள் பிறை அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்ற தாக்குதல்களில் 153 நகரங்களை உள்ளடக்கிய 500-க்கும் மேற்பட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தத் தாக்குதல்களில் எங்கள் நாட்டைச் சேர்ந்த 787 பேர் உயிரிழந்துள்ளனர்,” என அந்த அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் கூறியுள்ளது.
சமீபத்திய தகவலின்படி தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், மேற்குத் தெஹ்ரானில் உள்ள கராஜ் நகரத்திலும், மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் நகரத்திலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சனிக்கிழமை முதல், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் முழுவதும் ஏவுதளங்கள், ஈரானின் அணுத் திட்டத்துடன் தொடர்புடைய வசதிகள், இராணுவ தலைமையகங்கள், அரசியல் தலைமையின் உயர் நிலைத் தலைவர்கள் தொடர்புடைய இடங்களைத் தாக்கியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
