செய்திகள் உலகம்
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
வாஷிங்டன்:
ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா இணைந்ததைக் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வழங்கிய விளக்கங்களில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரான் முதலில் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக நம்பியதால், அமெரிக்க படையினரை இஸ்ரேல் தாக்குதலில் இணைக்க உத்தரவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். “நாம் முன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் முதலில் தாக்கியிருப்பார்கள்; அதில் எனக்கு உறுதி உள்ளது” என்று அவர் கூறினார். “இஸ்ரேல் அமெரிக்காவை இந்த போரில் இணைத்தது” என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
ஆனால், ரூபியோ முந்தைய நாள் அளித்த விளக்கத்தில், இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது தெரிந்ததால், அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து அமெரிக்க படைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் தாக்குதல், தூண்டுதல் இல்லாதது என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஈரான் தாக்கத் தயாராக இருந்ததாக டிரம்ப் கூறியுள்ளதுடன், அதற்கு ஆதாரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க தரப்பினர், ஈரான் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் ஈரான் அவற்றை அனுமதிக்கும் திட்டத்தை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 7:36 pm
விமானத்தில் சட்டையைக் கிழித்துச் சண்டை
September 19, 2026, 11:33 am
சவூதி அரேபியாவின் ரியாத்தில் பலத்த வெடி சத்தம்: வான்வழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
September 19, 2026, 11:17 am
கிரீன்லாந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த்அ அமெரிக்கா -டென்மார்க் இடையே ஒப்பந்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
September 16, 2026, 10:43 pm
வானிலிருந்து செய்திக்காக படம் பிடித்துக் கொண்டிருந்த NBC செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: மூவர் மரணம்
September 15, 2026, 10:30 pm
சிங்கப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப்களில் ஊடுருவி SMS அனுப்பிய ஆடவருக்குச் சிறை
September 15, 2026, 10:22 pm
ஏமன் உள்நாட்டுப் பூசல்: வாழ வழிதேடி இடம்பெயரும் மக்கள்
September 15, 2026, 10:17 pm
இன்றுமுதல் தாய்லாந்தில் விசா இல்லாத பயணம்: இனி ஒரு மாதம் மட்டுமே
September 15, 2026, 10:44 am
4,000க்கும் மேற்பட்ட வங்காளதேச நாட்டவர்களின் விசாக்களைத் திடீரென்று இரத்து செய்தது ஐக்கிய அரபு அமீரகம்
September 14, 2026, 1:16 pm
மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை
September 13, 2026, 8:03 pm
