செய்திகள் உலகம்
சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்: கட்டிடம் முழுமையாக சேதம்
ரியாத்:
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ராணுவத்தினர் நடத்திய அதிரடி டிரோன் தாக்குதலில், தூதரகக் கட்டடம், அதன் அருகில் இருந்த கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கடந்த சனிக்கிழமை நடத்திய கொடூரமான தாக்குதலில் ஈரானின் ஆன்மிக தலைவர் அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சவூதி, குவைத், துபை உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள், டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இந்தப் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில்,அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தாக்குதல் நடத்தியதில் கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்தன.
மத்திய கிழக்கு நாடுகள் நான்கு நாள்களாக பற்றி எரிந்து வரும் நிலையில், இந்த டிரோன் தாக்குதலை சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சவூதி மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க தூதரக வளாகத்தை இரண்டு டிரோன்கள் தாக்கின. இதன் விளைவாக தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
