செய்திகள் உலகம்
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
வாஷிங்டன்:
ஈரான்–இஸ்ரேல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல், ஈரானின் இரகசிய நிலத்தடி அணு தளத்தை தாக்கியதாக அறிவித்துள்ளது. அங்கு அணு ஆயுதத் தயாரிப்பிற்கான முக்கிய கூறுகள் ரகசியமாக உருவாக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஈரான் புரட்சிப் பாதுகாப்புப் படை பெருமளவில் ஏவுகணைகளையும், வான்வழி சாதனங்களையும் இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், துபாயில் உள்ள அமெரிக்க துணைத்தூதரக வளாகம் அருகே மனிதரற்ற வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் பரவி வரும் பதற்றத்தையடுத்து, பிரான்ஸ் தனது முக்கிய விமானம் ஏற்றுக் கப்பலை மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியுள்ளது என அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, மத்திய கிழக்கிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்ற சிறப்பு வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை, ஈரானை தாக்க அமெரிக்க விமானங்களுக்கு தளத்தை பயன்படுத்த அனுமதிக்காததால் ஸ்பெயினுடன் வர்த்தகத்தை நிறுத்துவேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தேவைப்பட்டால், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் குழு நிராயுதபாணியாக்கப்படும் வரை தனது படைகள் ஹெஸ்பொல்லாவைத் தொடர்ந்து தாக்கும் என்று இஸ்ரேலிய இராணுவத் தலைவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
