நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

இயற்கை வளங்களுக்கு நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, மலேசியாவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழ் நாள்காட்டியில் தை மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுவதை குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டின் பொங்கல் திருநாளை குடும்பத்தினருடனும் அன்பிற்குரியவர்களுடனும் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாட வேண்டும் என வாழ்த்தினார்.

பொங்கல் திருநாள் நன்றியுணர்வு, ஒருமித்த உணர்வும், ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்புகளை நினைவூட்டுவதாக கூறினார் பிரதமர் அன்வார்.

வளமான நாட்டை உருவாக்க இந்த ஒற்றுமை உணர்வை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இந்திய சமூகத்தினருக்கும், தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் அனைவருக்கும் பிரதமர் அன்வார் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். 

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset