நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் மகர ஜோதி திருவிழா; விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கிய அரசுக்கு நன்றி: யுவராஜா குருசாமி

பத்துமலை:

மலேசியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி இதனை கூறினார்.

பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் மகர ஜோதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

கிட்டத்தட்ட 60 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள் தங்களின் விரதத்தை பூர்த்தி செய்யும் விழாவாக இது அமைந்தது.

சபரிமலை போன்றே இங்கும் பத்துமலையிலிருந்து தங்க ஆபரணங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீ ஐயப்பசாமிக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டது.

அதன் பின் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்துமகர ஜோதியும் ஏற்றப்பட்டது.

கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட ஐயப்பசுவாமி பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஆண்டு மலேசியாவில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்துள்ளனர்.

இன்னும் பல பக்தர்கள் மகரஜோதி விழாவில் கலந்துகொள்ள சபரிமலைக்கு சென்றுள்ளனர்.

பக்தர்களுக்கு மலேசிய விமான நிலையங்களில் இரண்டாவது ஆண்டாக சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக விமான நிலையங்களில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக குடிநுழைவு  சோதனைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் எளிதாக மேற்கொள்ளப்பட்டது.

 இது பக்தர்களுக்கு பெரும் பயனாக இருந்தது.
இவ்வேளையில்  போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட  அரசாங்கத்திற்கும ஐயப்ப பக்தர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு இந்த சலுகைகள் மேலும் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கழிவு விலையில் டிக்கெட் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம்.

இதற்கு ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று யுவராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset