நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

மலேசியா முழுவதும் தமிழ் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்கினாலும், பள்ளியில் சேரும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சமீபத்திய தரவுகளின்படி 2026 கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில்முதலாம் ஆண்டில் 10,330 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இது முந்தைய ஆண்டு சேர்க்கையான 11,021 உடன் ஒப்பிடும்போது 691 மாணவர்களின் குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது.

தமிழ்ப்பள்ளிகள் நமது மலேசிய இந்திய சமூகத்தின் அடையாளம், முன்னேற்றத்தின் அடித்தளமாகும். இந்த பள்ளிகளை பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் மஇகா உறுதி கொண்டுள்ளது. ஆனால் அதை நாங்கள் தனியாகச் செய்ய முடியாது.

இதை மாற்றுவதில் தமிழை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனங்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், பள்ளி மேலாண்மை வாரியங்கள், சமூகத் தலைவர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

பராமரிப்பு முறை என்ற மனநிலையிலிருந்து மூலோபாய வாதத்திற்கு நாம் மாற வேண்டும்.

சேர்க்கை முறைகளை வடிவமைப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கை ஆற்ற வேண்டும்.

குறிப்பாக தமிழ் கல்வியின் நீண்டகால மதிப்பை பெற்றோர்கள் அங்கீகரிக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பள்ளிகளை தீவிரமாக ஆதரிக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset