நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன்  திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

பத்துமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவாமி மண்டபம் பிரமாண்டமான முறையில் திறப்பு விழா  காணவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

பத்துமலையில் ஒற்றுமை பொங்கல் விழா வரும் ஜனவரி 17ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

அன்றைய தினம் பத்துமலைத் திருத்தலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள  சுவாமி மண்டபம் திறப்பு விழா காணவுள்ளது.

அதைத் தொடர்ந்து வைகாசி விசாக உபயத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட தண்ணீர் பந்தல் கட்டடத் திறப்பு விழாவும் நடைபெறும்.

தேவஸ்தானத்தின் தலைவர் என்ற முறையில் இம் மண்டபங்களை நான் திறந்து வைக்கவுள்ளேன்.

மேலும் இவ்விழாவின் உச்சக்கட்டமாக அருணகிரிநாதர் அருளிய நயவுரையுடன் கூடிய திருப்புகழ் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறும்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆன்மீக வாழ்த்துரை வழங்கி முதல் நூலை பெற்றுக் கொள்வார்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

ஆக பொதுமக்கள் இதையே அழைப்பாக ஏற்றுக் கொண்டு இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset