நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாய்ம் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே எம்ஏசிசியை தொடர்பு கொண்டார்: அசாம் பாக்கி

சைபர்ஜெயா:

துன் டாய்ம் ஜைனுடினின் குழந்தைகளில் ஒருவர் மட்டுமே இதுவரை எம்ஏசிசியை தொடர்பு கொண்டார்.

அதாவது வழக்கு விசாரணையில் உதவுவதற்காக முகமது வீரா டானியைத் தொடர்பு கொண்டார் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

முன்னாள் நிதியமைச்சரின் மூன்று பிள்ளைகளும் உடனடியாக எம்ஏசிசி அலுவலகத்தில் ஆஜராவதை உறுதி செய்யுமாறு துன் டாய்மின்  குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களை அவரது கட்சி வலியுறுத்தியது.

டாய்மின் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே எங்களைத் தொடர்பு கொண்டுள்ளார். மற்ற மூவரின் இருப்பிடம் தெரியவில்லை.

டாய்மின் மற்ற மூன்று பிள்ளைகளும் விரைவில் எங்கள் அலுவலகத்தில் ஆஜராவதற்கு அவரது வழக்கறிஞர்கள் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 27 அன்று டாய்மின் நான்கு பிள்ளைகளான அஸ்னிடா, வீரா டானி, முகமது அமீர் ஜைனுடின்,  முகமது அமீன் ஜைனுடின் ஆகியோரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியைக் கோரி எம்ஏசிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset