நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: வான் ரோஸ்டி

குவாந்தான்:

பகாங்கில் சுமார் 8,000 அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு நோன்பு பெருநாளுடன் இணைந்து சிறப்பு நிதி உதவியாக 1,000 ரிங்கிட்டை பெறுவார்கள்.

ஹரி ராயாவைக் கொண்டாட அரசு ஊழியர்கள் தயாராக உதவும் வகையில் இந்த உதவி நோக்கம் கொண்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறினார்.

இந்த சிறப்பு உதவி பெருநாளுக்கு  ஒரு வாரத்திற்கு முன்பு பெறுநர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

இந்த உதவி மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து சிறந்த சேவைகளை வழங்க ஊக்குவிக்கும்.

இதனால் மாநிலத்தை வளப்படுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும் மக்களின் நல்வாழ்வு தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset