நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசியின் முன்னாள் உதவியாளரை எம்ஏசிசி கண்காணித்து வருகிறது

சைபர்ஜெயா:

எம்ஏசிசி விசாரணைகளில் உதவுவதற்காக அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சாயை கண்காணித்து வருகிறது.

இவர் முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியின் முன்னாள் உதவியாளரும் ஆவார்.

சாய் அல்லது அவரது முழுப் பெயர் சாய் ஜின் ஷெர்ன். விசாரணைகளில் உதவுவதற்காக கண்காணிக்கப்படுவதாக எம்ஏசிசி கூறியது.

ஆனால் விசாரிக்கப்படும் வழக்கின் விவரங்களை வெளியிடவில்லை.

எனவே, அந்த நபரின் இருப்பிடம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணை அதிகாரி முகமது ஹபிட்ஸ் அப்துல் ஹலீமை 0175046503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு எம்ஏசிசி கேட்டுக் கொள்கிறது.

சாயின் கடைசி முகவரி எண். 10, ஜாலான் நிக்கல் 7/26ஏ, பிரிவு 7, 40000 ஷா ஆலம், சிலாங்கூர் என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பொருளாதார அமைச்சராக இருந்தபோது சாய் முன்பு ரபிசியின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset