நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்களின் நலன், பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரைத் தொடர்ந்து கொந்தளிப்பான நாட்டில் உள்ள அனைத்து மலேசியர்களின் நலனும் பாதுகாப்பும் முன்னுரிமையாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.

ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை கூறினார்.

 வெளியுறவு அமைச்சு  விரைவில் எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து ஒரு தொடர் அறிக்கையை வெளியிடும்.

மேற்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தைச் சுற்றியுள்ள மலேசியர்கள் தொடர்பான குறிப்பிட்ட நிலைமை குறித்த சில தகவல்களையும் சமீபத்திய கருத்துகளையும் விஸ்மா புத்ரா வழங்குகிறது.

எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து விஸ்மா புத்ரா ஒரு தொடர் அறிக்கையை வெளியிடும் என்று அவர் இன்று இங்கு நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset