நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுப்பு

நீலாய்:

இங்கு அமைந்துள்ள தொழிலாளர் தங்கும் விடுதியில், 30 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டார்.

இரவு 11.21 மணியளவில் அவசர அழைப்பு மையத்திலிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நான்காவது மாடி படிக்கட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், கழுத்துப் பகுதியில் கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பகட்ட பரிசோதனையில், கூர்மையான ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டது. சம்பவத்திற்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதுடன், தனிப்பட்ட அல்லது பண விவகாரத் தகராறு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு கொலை குற்றமாக பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சம்பவம் தொடர்பான தகவல் உள்ளவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset