நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் 18,455  அரசு ஊழியர்கள் பெருநாள் சிறப்பு உதவியாக ஒரு மாதச் சம்பளத்தை பெருவார்கள்: ஒன் ஹபிஸ்

ஜொகூர்:

ஜொகூர் மாநிலத்தில் உள்ள  மொத்தம் 18,455 நிரந்தர,  ஒப்பந்த அரசு ஊழியர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான  நோன்பு பெருநாள் சிறப்பு நிதி உதவியை பெறுவார்கள்.

ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காசி இதனை கூறினார்.

2026 ஆம் ஆண்டிற்கான ஜொகூர் மாநில சேவை சுற்றறிக்கை எண் 1 இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு மாத சம்பளத்தைப் பெறுவார்கள்.

இந்த சிறப்பு நிதி உதவியில் 11,271 மாநில அரசு ஊழியர்கள், 6,192 உள்ளூர் ஊராட்சித் துறை  ஊழியர்கள், 992 மாநில சட்டப்பூர்வ அமைப்பு ஊழியர்கள் அடங்குவர்.

மாநில அரசின் முடிவின்படி, இந்த சிறப்பு நிதி உதவிக்கான கட்டணம் 2026 மார்ச் 5ஆம் தேதியன்று அல்லது அந்தந்த நியமன அதிகாரிகள் நிர்ணயிக்கும் தேதியில் வழங்கப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மாநில அரசு இந்த சலுகையை வழங்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டிற்கான ஹரி ராயா சிறப்பு நிதி உதவி, அவர்கள் முழு நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் தொடர்ந்து சேவை செய்வதற்கு ஒரு ஊக்கியாகப் பயன்படுத்தப்படலாம்.

ஜொகூர் மக்களின் நல்வாழ்வுக்காக இந்த மாநிலத்தை சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வது இதில் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset